ராமேஸ்வரம், தூத்துக்குடி ரயில் நேரம் மாற்றம்

சென்னை: 13 பல்வேறு சிறப்பு ரயில்களின் புறப்படும் மற்றும் சென்றடையும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:  பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த 13 சிறப்பு ரயில்களின் புறப்படும் மற்றும் சென்று சேரும் நேரம் மாற்றப்பட்டு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் - தூத்துக்குடி (02693) இடையே இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயிலானாது, காலை 6.40 மணிக்கு தூத்துக்குடி சென்று சேரும். அதேபோல் சென்னை எழும்பூர் - செங்கோட்டை (02661) சிறப்பு ரயிலானது, காலை 8.25 மணிக்கு செங்கோட்டைக்கும், சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் (02205) சிறப்பு ரயிலானது, அதிகாலை 4.20 மணிக்கு ராமேஸ்வரமத்திற்கும் சென்று சேரும். கொல்லம் - சென்னை எழும்பூர் (06724) சிறப்பு ரயிலானது கோவில்பட்டியில் இரவு 8.53 மணிக்கு நின்று 8.55 மணிக்கும், சாத்தூரில் இரவு 9.13 மணிக்கு நின்று 9.15 மணிக்கும் புறப்படும்.

இதுதவிர மேலும் 9 சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் தேவை கருதி சென்னை சென்ட்ரல் - ஐதராபாத் (02603, 02604) இடையே சென்ட்ரலில் இருந்து நாள் தோறும் மாலை 4.45 மணிக்கு இயக்கப்பட்டு வந்த தினசரி சிறப்பு ரயில் சேவை மீண்டும் தொடரும்.  பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் சென்னை சென்ட்ரல் - பித்ரகுண்டா  (07237, 07238) இடையே இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயிலானது ஜூலை 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல்   சென்னை சென்ட்ரல் - திருப்பதி  (06203, 06204) இடையே இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயிலானது அடுத்த கட்ட அறிவிப்புகள் வரும் வரை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அறிக்கை கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>