சொல்லிட்டாங்க...

குறுக்குவழி அரசியல் செய்வதில் கில்லாடியான சமாஜ்வாடி, ெவறுக்கத்தக்க வகையில் ஜாதி அடிப்படையில் அரசியல் நடத்துகிறது. - பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி

அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டிய பிரதமர் மோடி, பாஜ ஆளுகிற மாநிலங்களுக்கு சாதகமாகவும், பாஜ அல்லாத மாநிலங்களுக்கு பாதகமாகவும் நடக்கிறார். - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கல்வி சேர்க்கை, நீட் உட்பட  அனைத்து நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக  கட்சிகளின் நிலைப்பாடு. - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

காவிரி டெல்டா மாவட்டங்களில் ைஹட்ரோ கார்பன் கிணறு அமைக்க துடித்துக்கொண்டிருக்கும் ஓஎன்ஜிசி நிறுவன முயற்சிகள் உறுதியாக முறியடிக்கப்பட வேண்டும். - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி

Related Stories:

>