மின்கட்டணம் கணக்கிடும் பணி தொடக்கம்

சென்னை: கொரோனாவால் மின்வாரிய ஊழியர்கள் கடந்த மாதம் வீடு வீடாக சென்று மின் கணக்கீடு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, முந்தைய மாத மின் கட்டணம், 2019ம் ஆண்டு செலுத்திய கணக்கீட்டுத் தரவுகளை உதவி செயற்பொறியாளரிடம் நுகர்வோர் அளிப்பதன் மூலம் கட்டணத்தை மாற்றியமைப்பது போன்ற வசதிகளை மின்வாரியம் வழங்கியிருந்தது. இந்த வாய்ப்புகள், ஜூன் 15ம் தேதி வரை மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் மின் கணக்கீடு செய்யும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.

Related Stories:

>