அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளாக கிடப்பில் மேம்பாலப்பணி: பட்டாபிராமில் மக்கள் தவிப்பு

சென்னை: பட்டாபிராம் பகுதியில் ஆவடியில் இருந்து மிலிட்டரி சைடிங் பகுதிக்கு ரயில்வே பாதை செல்கிறது. இதனால் பட்டாபிராம் சி.டி.எச் சாலையில் ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது.    ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து பட்டாபிராம் மில்ட்டரி சைடிங், முத்தாபுதுப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு தினமும் அரை மணி நேரத்திற்கு ஒரு ரயில் சென்று வரும். அப்போது எல்லாம்  ரயில்வே கேட் அடிக்கடி மூடியே கிடக்கும். . பொதுமக்கள் சிரமத்தை போக்க ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டாக மத்திய, மாநில  அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.  இதனையடுத்து, 2006-11ம் ஆண்டில் திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதன் விளைவாக, 2010-11ம் நிதியாண்டில் ரூ. 33.48கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலையாக, ரயில்வே மேம்பாலம் அமைக்க, ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு தொடக்கத்தில் பட்டாபிராம், சி.டி.எச் சாலை, ரயில்வேகேட் பகுதியில் மேம்பாலம் கட்ட மண் பரிசோதனையை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். அதன் பிறகு முதற்கட்டமாக மேம்பாலம் கட்ட அரசு சார்பில் 38 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர், அந்த தொகை போதாது என அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது.  இதனையடுத்து, ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க ₹52 கோடி நிதி தேவை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.        இந்நிலையில், ‘சென்னை- திருவள்ளூர் நெடுஞ்சாலை, ஆறுவழிச்சாலையாக மாற்றி அமைக்கப்படும்’ என, அதிமுக அரசு அறிவித்தது.

பின்னர், திருத்திய மதிப்பீட்டில், ஆறுவழிச்சாலை மேம்பாலமாக அமைக்க முடிவு செய்யப்பட்டு, 2018முதல் பணிகள், நடந்து வந்தன. மேலும், மேம்பாலப் பணிகளை திட்டமிட்டபடி 2020பிப்ரவரி மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டது. இந்த பாலப்பணிகள் ‘கான்கிரீட் டெக்’ இதில், துாண்கள் அமைக்கப்பட்டு, ‘கான்கிரீட் டெக்’ பதிக்கும் பணிகளை, நெடுஞ்சாலைத்துறை  துவங்கியது. மொத்தம், 16 கான்கிரீட் டெக்குகள் அமைக்கப்பட வேண்டும். மேற்கண்ட பணிகள், தற்போது அரைகுறையாக முடிக்கப்பட்டுள்ளன. மேலும், ரயில்வே பாதையில் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் 2020ம் ஆண்டு இறுதியிலேயே மேம்பால பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

Related Stories:

>