நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபரை கொன்ற 8 பேர் கைது

வேளச்சேரி: பெரும்பாக்கம் அண்ணா தெருவை சேர்ந்தவர் சரத் (எ) சரத்குமார்(26). நேற்று முன்தினம் இரவு  வீட்டு வாசலில் தனது செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் சரத் மீது 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில் தலை சிதறி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தவரை அரிவாள் கொண்டு சராமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது. புகாரின்பேரில் பரங்கிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து வெற்றி(24) மற்றும் அவரது  கூட்டாளிகள் திலீப், ஷியாம், வினோத் உட்பட 8 பேரை ேநற்று மாலை சுற்றி வளைத்து கைது செய்தனர்.இதனை தொடர்ந்து, அவர்களை தனி இடத்தில் வைத்து கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>