கள்ளச்சந்தையில் கருப்பு பூஞ்சை மருந்து விற்ற 2 பேர் கைது

பல்லாவரம்: தாம்பரத்தை சேர்ந்தவர்கள் சிரஞ்சீவி(32), பிரசாந்த்(28). இவர்கள் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாளர்கள். இருவரும் கள்ளச்சந்தையில் திருட்டுத்தனமாக கருப்பு பூஞ்சை மருந்தை விற்பனை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து புகாரின்பேரில் போலீசார் இருவரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>