பிஎப்.புடன் ஆதார் இணைப்பு செப். 1 வரை கெடு நீட்டிப்பு

புதுடெல்லி: பிஎப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு வருகிற செப்டம்பர் ஒன்றாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக வருங்கால வைப்பு நிதித்துறை தெரிவித்துள்ளது.  பிஎப் பெறும் ஊழியர்கள் அனைவரும்  தங்களின் யுஏஎன் எண்ணுடன்  ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வருங்கால  வைப்பு நிதியம் சமீபத்தில் அறிவித்தது. அவ்வாறு ஆதார் எண் இணைக்காமல் இருந்தால், ஒவ்வொரு மாதமும் செலுத்தப்படும் நிறுவன பங்கு தொகையை ஊழியர்களின் பிப் கணக்கில் சேர்க்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.  இந்நிலையில், கொரோனா தொற்று சூழல் காரணமாக  சந்தாதாரர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை கருத்தில் கொண்டு, பிஎப் கணக்குடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக நேற்று முன்தினம் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியம் அறிவித்துள்ளது.

Related Stories: