ஆன்மிகம் என்ற ஆயுதத்தை கையிலெடுத்து மக்களை பிளவுப்படுத்தி அரசியல் செய்ய துடிக்கிறது பாஜக; வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி

திருச்சி: தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில், உச்சிப்பிள்ளையார் கோயில்களில் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு அளித்த ேபட்டி:  சோழிங்கநல்லூர் நரசிம்மர் கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர், திருநீர்மலை முருகன் கோயில், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில், திருத்தணி முருகன் கோயில் ஆகிய 5 கோயில்களில் ரோப்கார் அமைக்க முதல்வர் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இங்கு ரோப் கார் வசதி சாத்தியம். ரோப்கார் வசதி ஏற்படுத்த உலகளவில் டெண்டர் கோரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.கோயில் விவகாரங்களில் திமுக அக்கறை செலுத்துவது சந்தேகத்துக்கு இடமாக இருப்பதாக பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறி உள்ளாரே என கேட்டபோது, ‘‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாகத்தான் தெரியும்.

ஆன்மிகம் என்ற ஆயுதத்தை கையிலெடுத்து மக்களை பிளவுப்படுத்தி அரசியல் செய்ய துடிக்கின்ற சக்திகளுக்கு இதுபோன்ற எங்களது நிகழ்வுகள் சந்தேகத்தைத்தான் ஏற்படுத்தும். திட்டங்கள் அறிவித்தபின் சிலர் பாராட்டுகின்றனர். சிலர் சந்தேகத்தை எழுப்புகின்றனர். பொருத்திருந்து பாருங்கள். திமுக அறிவித்த திட்டங்கள் வார்த்தை ஜாலங்கள் அல்ல. செயல்படுத்தக்கூடிய திட்டங்களே’’ என்றார்.

கோயில்கள் விரைவில் திறப்பு

அமைச்சர் சேகர் பாபு கூறுகையில், ‘‘கொரோனா தொற்று பேரிடரை முதல்வர் வென்றெடுத்து வருகிறார். இன்னும் ஒருவார காலத்திற்குள் கொரோனா நோய்த்தொற்று தமிழகத்திலிருந்து விரட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. கொரோனா அச்சம் விலகும் நிலையில் இந்து கோயில்கள் விரைவில் திறக்கப்பட்டு, பொதுமக்கள் வழிபாட்டுக்கு விடப்படும்’’ என்றார்.

Related Stories: