நண்பனை தாக்கிய ஆத்திரத்தில் கும்பலாக வந்து கொல்ல முயன்றதால் கொன்றோம்: பறக்கை புது மாப்பிள்ளை கொலையில் கைதான 4 பேர் பரபரப்பு வாக்குமூலம்

சுசீந்திரம்: பறக்கை அருகே நடந்த புதுமாப்பிள்ளை கொலையில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். நாகர்கோவில் அருகே உள்ள பறக்கையை சேர்ந்தவர் மதுசூதனன். இவரது மகன் அய்யப்பன் (24). கொத்தனார். இவரது மனைவி ரேஷ்மா (21). கடந்த 6 மாதங்களுக்கு முன் தான் இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது ரேஷ்மா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் பறக்கைகுளம் அருகே உள்ள வலிகொலி  அம்மன் கோயில் அருகில் அய்யப்பனையும், அவரது நண்பர் சந்ேதாசையும் கத்தியால் குத்தி விட்டு ஒரு கும்பல் தப்பியது.

படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் அய்யப்பன் பரிதாபமாக இறந்தார். சந்தோஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை ெதாடர்பாக  பறக்கை அளிசன்காட்டுவிளையை சேர்ந்த பிரபு அளித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பறக்கை கக்கன்புதூர் பகுதியை சேர்ந்த ஸ்டாலின் என்ற சாலி (31), அவரது சகோதரர் சுரேஷ் (32),  கேசவன்புதூர் நெசவாளர் காலனியை சேர்ந்த பிரபு (32), கோட்டார் வடலிவிளையை சேர்ந்த அய்யப்பன் (32) ஆகியோர் சேர்ந்து தான் கொலை செய்தது தெரிய வந்தது.

இவர்களை பிடிக்க டி.எஸ்.பி. பாஸ்கரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் காளியப்பன், சப் -இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், சுரேஷ்குமார் (தனிப்படை) ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. தனிப்படையினர் நடத்திய விசாரணையில் வெளி மாவட்டத்துக்கு தப்பி செல்ல இருந்த  ஸ்டாலின் மற்றும் அவரது கூட்டாளிகளான சுரேஷ், பிரபு, வடலிவிளை அய்யப்பன் ஆகிய 4 பேரையும் நேற்று கைது செய்தனர். கைதான நால்வரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு பின், சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது.

கொலை தொடர்பாக கைதான ஸ்டாலின் மற்றும் கூட்டாளிகள் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடை திறந்ததால் நாங்கள் நண்பர்கள் சேர்ந்து பறக்கைகுளம் அருகே உள்ள வலிகொலி அம்மன் கோயில் ேராட்டில் அமர்ந்து மது அருந்தினோம். அப்போது அங்கு வந்த பறக்கையை சேர்ந்த லிங்கம் என்பவர், எங்களிடம் தகராறு செய்தார். எங்களை அவர் தாக்கியதால் நாங்கள் நால்வரும் சேர்ந்து லிங்கத்தை தாக்கினோம். உடனடியாக அவர் தனது நண்பர்களுக்கு போன் செய்தார். லிங்கம் போன் செய்த சிறிது நேரத்தில் அய்யப்பன், சந்ேதாஷ் மற்றும் 10 பேர் கொண்ட கும்பல் வந்து எங்களை சரமாரியாக தாக்கினர்.

செங்கல்ைல தூக்கி எறிந்தனர். இதனால் நாங்கள் உயிருக்கு பயந்து அவர்களை தாக்கினோம். அந்த சமயத்தில் தான் கத்தியால் அய்யப்பன், சந்தோசை குத்தினோம். இதில் அவர்கள் மயங்கி விழுந்தனர். இதையடுத்து நாங்கள் அங்கிருந்து தப்பினோம். ரயிலில் வெளி மாவட்டத்துக்கு தப்ப இருந்தோம். அந்த சமயத்தில் தான் போலீசார் எங்களை பிடித்து விட்டனர். இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறி உள்ளதாக தெரிகிறது. கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே கொலையாளிகளை பிடித்த தனிப்படை போலீசாரை எஸ்.பி. பத்ரி நாராயணன் பாராட்டினார்.

Related Stories: