பாலியல் புகாரில் சிக்கி டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை சென்னை அழைத்து வர நீதிமன்றம் அனுமதி..!!

டெல்லி: டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை சென்னைக்கு அழைத்து வர நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னை சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது. தொடர்ந்து சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. அதன்பிறகு இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. 

இதற்கிடையே உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் திடீரென அங்கிருந்து தப்பியோடி டெல்லி காசியாபாத் பகுதியில் பதுங்கினார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும்  உத்திரபிரதேசம் - டெல்லி எல்லையில் உள்ள காசியாபித்தில் சிவசங்கர் பாபாவை டி.எஸ்.பி. குணா தலைமையிலான தமிழக சிபிசிஐடி போலீசார் மடக்கிப்பிடித்தனர். 

போலீசாரிடம் பிடிபட்ட போது சிவசங்கர் பாபா மொட்டை அடித்திருந்தார். அவரை தலைநகர் டெல்லியில் இருக்கின்ற மாவட்ட சாகெட் நீதிமன்ற நீதிபதி விபுல் சத்ருவார் முன்பு ஆஜர்படுத்தினர். இந்நிலையில்  சிவசங்கர் பாபாவை தமிழ்நாட்டுக்கு அழைத்து வர நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

சனிக்கிழமை அன்று தமிழ்நாட்டில் உள்ள செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி இன்று இரவு 8 மணிக்கு தலைநகர் டெல்லியில் இருந்து தனியார் விமானம் மூலமாக சிவசங்கர் பாபா சென்னை அழைத்துவரப்படவிருக்கிறார்.  

Related Stories: