ஆபீசை கூட்டிப் பெருக்கும் ஐஏஎஸ் அதிகாரி: போர்டு எழுதிவைத்து விழிப்புணர்வு

ஜான்சி: ஜான்சியில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், தனது அலுவலகத்தை அவரே சுத்தம் செய்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளதால், மற்ற அலுவலர்கள் மத்தியில்  தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி  நகர திட்ட மற்றும் வளர்ச்சி பிரிவு கமிஷனராக பணியாற்றி வரும்  மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி டாக்டர் அஜய் சங்கர் பாண்டேவின் அலுவலக அறைக்கு வெளியே ஓர் அறிவிப்பு பலகை உள்ளது. அதில், ‘என்னுடைய இந்த அறையை நானே சுத்தம் செய்கிறேன்’என்று எழுதப்பட்டுள்ளது. இவர், பணியில் சேர்ந்த காலத்தில் இருந்தே, தனது அறையை அவரே சுத்தம் செய்து கொள்வார்.

கடந்த காலங்களில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய இடங்களில் எல்லாம் இதேபோன்று தனது அறையை அவரே சுத்தம் செய்து கொள்வார். இவரது பணியை பார்க்கும், துணை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஜான்சி ஆணைய அலுவலக பணியாளர்கள் கூறுகையில், ‘கமிஷனர் அஜய் சங்கர் பாண்டே, அவரது பணி நேரத்திற்கு 10 நிமிடங்கள் முன்னதாக வந்துவிடுவார். முதலில் அவர் தனது சொந்த அறையை சுத்தம் செய்வார். அவரது அறையை அவரே சுத்தம் செய்து கொள்வதால், அதற்காக யாரையும் பணிக்கு அமர்த்துவதில்லை.

அலுவலகத்தின் மற்ற பகுதிகளையும் தூய்மையாக வைத்திருக்க வலியுறுத்துவார். அவரது அறைக்கு வெளியே உள்ள பலகையில், எனது அறையை நானே சுத்தம் செய்கிறேன். அலுவலகத்திற்குள் மாசு ஏற்படுத்துவதன் மூலம் எங்களது பணிச்சுமையை அதிகரிக்க வேண்டாம் என்று எழுதி வைத்துள்ளார்’என்றார்.

Related Stories:

>