வெடிபொருள், தொழிலதிபர் கொலை வழக்கு; கைதான போலீஸ் அதிகாரியின் 2 கூட்டாளிகள் கைது: என்ஐஏ அதிரடி நடவடிக்கை

மும்பை: காரில் வெடிபொருள் வழக்கு மற்றும் தொழிலதிபர் கொலை வழக்கில் தொடர்புடைய போலீஸ் அதிகாரியின் 2 கூட்டாளிகளை என்ஐஏ கைது செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தொழிலதிபா் முகேஷ் அம்பானி வீட்டருகே ஜெலட்டின் குச்சிகளுடன் கார் நிறுத்தப்பட்டடிருந்த விவகாரத்தில், சந்தோஷ் ஷெலார், ஆனந்த் ஜாதவ் ஆகிய இருவரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது. இதுகுறித்து தேசிய புலனாய்வு வட்டாரங்கள் கூறுகையில், ‘அம்பானி வீட்டின் அருகே வெடிப்பொருள்களுடன் கார் நிறுத்தப்பட்டிருந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட சந்தோஷ் ஷெலார், ஆனந்த் ஜாதவ் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், தொழிலதிபா் மன்சுக் ஹிரேன் (முகேஷ் அம்பானி வீட்டருகே நிறுத்தப்பட்ட காாின் உரிமையாளர்) மர்மமாக கொல்லப்பட்ட விவகாரத்திலும் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். சந்தோஷ் ஷெலாா், குடிசைப் பகுதி மறுசீரமைப்பு ஆணையத்தின் திட்டங்களில் மலாட் பகுதியில் பணியாற்றி வந்துள்ளார். மும்பை காவல்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற என்கவுன்ட்டருக்கு பெயா் பெற்ற ஒரு காவல்துறை அதிகாரியுடன் (காவல்துறை உதவி ஆய்வாளா் சச்சின் வஜே) அவருக்கு தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தும்போது அவா் அந்த அதிகாரியன் பெயரை உரக்கக் கத்தினார்’என்றாா்.

மர்ம கார் மற்றும் தொழிலதிபர் கொலை ஆகிய இரு விவகாரங்கள் தொடர்பாக ஏற்கெனவே காவல்துறையைச் சேர்ந்த 3 அதிகாரிகள், ஒரு காவலர், கிரிக்கெட் சூதாட்ட முகவர்ஆகியோரை கைது செய்யப்பட்டனர். அவர்களில் காவல்துறை உதவி ஆய்வாளர் சச்சின் வஜே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: