அதிமுகவுக்கு யாரும் சாதி சாயம் பூச முடியாது -கடம்பூர் ராஜூ

சென்னை: அதிமுகவுக்கு யாரும் சாதி சாயம் பூச முடியாது என கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். அரசியல் களத்தில் இருந்து ஒதுங்கி இருப்பதாக தெரிவித்திருந்த சசிகலா கடந்த மாதம் முதல் தனது ஆதரவாளர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். ஒவ்வொரு தொண்டரிடமும், தான் விரைவில் உங்களை சந்திக்க இருப்பதாகவும், ஓபிஎஸ் மற்றும் எடப்பாடியின் அரசியல் நடவடிக்கைகள் தொண்டர்களுக்கு எதிராக இருப்பதாகவும் தெரிவித்தார். இதேபோல், நேற்று முன்தினம் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், சசிகலாவின் நடவடிக்கைகளை எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும், சசிகலாவுடன் பேசிய அதிமுக நிர்வாகிகள் 16 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களில் சசிகலாவின் ஆதரவாளராக இருந்த புகழேந்தியும் அடங்குவார். இந்நிலையில் மீண்டும் கட்சி பணிக்கு வருவேன் என்ற சசிகலாவின் ஆடியோ குறித்த கேள்விக்கு கடம்பூர் ராஜூ பதில் அளித்துள்ளார். அதிமுகவுக்கு யாரும் சாதி சாயம் பூச முடியாது. கட்சியில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாதவர் பற்றி கருத்து கூறுவது சரியில்லை என கூறினார்.

Related Stories:

>