ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் 4,970 பேர் மரணம்!!

சென்னை : ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் 4,970 பேர் இறந்துள்ளனர். இதில் கொரோனா பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதல் 4 நாட்களுக்குள் 49% பேர் இறந்தனர்.இது போல 4 முதல் 8 நாட்களுக்குள் 26% பேரும் 8 முதல் 12 நாட்களுக்குள் 14% பேரும் 12 முதல் 16 நாட்களுக்குள் 7% பேரும் 16 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் தங்கி இருப்பவர்களில் 4% பேரும் இறந்துள்ளனர். அதிலும் குறிப்பாக கடந்த 12 நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் நாளிலேயே 870 பேரும் 2வது நாளில் 529 பேரும் 3வது நாளில் 527 பேரும் 4வது நாளில் 491 பேரும் என முதல் 4 நாட்களில் மட்டும் 2,417 பேர் இருந்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் நமக்கு தெரியவந்துள்ளது.

மற்றொரு தரவுகளை நாம் பார்க்கும் போது, ஆர்டிபிசிஆர் சோதனையில் கொரோனா பாசிட்டிவ் என கண்டறியப்பட்ட பின்னர் முதல் 4 நாட்களில் 41% பேரும் 4 - 8 நாட்களில் 26% பேரும் 8 - 12 நாட்களில் 16% பேரும் 12 - 16 நாட்களில் 9% பேரும் 16 நாட்களுக்கு பிறகு 8% பேரும் இறப்பை தழுவுகின்றனர்.ஆர்டிபிசிஆர் சோதனையில் கொரோனா பாசிட்டிவ் என கண்டறியப்பட்ட முதல் நாளில் 798 பேரும் 2வது நாளில் 438 பேரும் 3வது நாளில் 419 பேரும் 4வது நாளில் 398 பேரும் இறக்கின்றனர்.சென்னை போன்ற மாநகராட்சி பகுதிகளில் வீட்டுக்கு வீடு சென்று காய்ச்சல் முகாம் நடத்தி கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டாலும் தமிழ்நாடு முழுவதும் கொரோனா பாசிட்டிவ் என்று கண்டறிந்து பின்னர் மருத்துவமனையில் சேருவதில் சுணக்கம் உள்ளதை தான் இந்த தரவுகள் நமக்கு உணர்த்துகின்றன.

Related Stories:

>