வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேலும் ஒரு ஆண் சிங்கம் உயிரிழப்பு: பூங்கா நிர்வாகம் தகவல்

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேலும் ஒரு ஆண் சிங்கம் உயிரிழந்தது. சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில், 3ம் தேதி நீலா என்கிற பெண் சிங்கம் கொரோனாவால் இறந்தது. இதனையடுத்து, பூங்காவில் உள்ள 14 சிங்கங்களில் 10 சிங்கங்களுக்கு கொரோனா உறுதியானது. இதுபோல், 4 புலி உள்ளிட்ட மற்ற விலங்குகளுக்கும் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. கொரோனா உறுதியான சிங்கங்களைத் தனிமைப்படுத்தி, நுண்ணிய கண்காணிப்பில் வைத்து சிகிச்சையளித்து வருகின்றனர். கால்நடை மருத்துவர்களும் களப்பணியாளர்களும் அங்கு தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் ஒன்று உயிரிழந்தது என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் ஆண் சிங்கம் உயிரிழந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் விலங்குகள் நல ஆர்வலர்கள், பொதுமக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து பூங்காவில் உள்ள மற்ற சிறுத்தை, புலி போன்ற விலங்குகளுக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories:

>