பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் அளித்த முதலமைச்சருக்கு நன்றி: அற்புதம்மாள் பேட்டி

சென்னை: பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் அளித்த முதலமைச்சருக்கு நன்றி என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் தமது மகன் பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக ஒருமாதம் பரோல் வழங்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். புதிதாக பொறுப்பேற்று இருக்கக்கூ டிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று சிறை விதிகளில் தளர்வு அளித்து பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறப்பு விடுப்பு அளித்து உத்தரவிட்டுளளர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் அற்புதம்மாள் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் அளித்த முதலமைச்சருக்கு நன்றி; பரோல் நீட்டிப்பது தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளேன். நீங்கள் இருக்கும் உணர்வோடு தான் நானும் உள்ளேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார் என கூறினார்.

Related Stories:

>