மலை கிராமத்தில் மலைக்க வைக்கும் கல்வி சேவை!: கொரோனா ஊரடங்கால் ஆசிரியரான பழங்குடியின பெண்...குவியும் பாராட்டு..!!

கோவை: கோவை சின்னாம்பதி மலை கிராமத்தின் முதல் பட்டதாரி பழங்குடியின பெண் சந்தியா நாளொன்றுக்கு 7 மணி நேரம் வகுப்புகள் எடுத்து கல்வி சேவை ஆற்றி வருகிறார். கொரோனா ஊரடங்களில் பள்ளி குழந்தைகளுக்கு ஆசிரியராக மாறிய பட்டதாரி பெண்ணிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

கோவை வாலையாறு அருகே உள்ள சின்னாம்பதி பழங்குடியின கிராமத்தை சேர்ந்த சந்தியா, கொரோனா ஊரடங்கால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து வருகிறார். இதுவரை பள்ளி படிப்பையே முழுமையாக முடிக்காத அக்கிராமத்தில் பழங்குடி கிராம குழந்தைகளுக்கு அறிவு பசியை தனது விடா முயற்சியால் தீர்த்து வருகிறார்.

கொரோனா முதல் அலையின் போது பள்ளி,  கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டது. இதனால் அக்கிராமத்தில் உள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு சந்தியா சிறப்பு வகுப்புகளை எடுத்துள்ளார். தற்போது 2வது அலையின் போதும் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் சிறப்பு வகுப்புகளை எடுத்து வருகிறார். 

ஆங்கிலம், கணிதம் பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடம் கற்று கொடுப்பதால் பள்ளி செல்லாமல் வீட்டில் உள்ள நேரத்திலும் அங்குள்ள மாணவர்கள் கல்வி அறிவு பெறுவதில் எந்த பிரச்னையும் ஏற்படுவதில்லை. பழங்குடி கிராமத்தில் கல்வி கற்பதே சவாலாக உள்ள நிலையில் பெண் பட்டதாரி ஒருவர் மாணவர்களின் அறிவு கண்களை திறந்துள்ளார். இவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவித்து வருகிறது. 

Related Stories: