தமிழகத்தில் அரசு பஸ்கள் இயக்குவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் அரசு பஸ்கள் இயக்குவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கொரோனா பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகங்கள் தயாராகி வருகின்றன. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலைதடுக்கும் வகையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது அத்தியாவசிய பணியாளர்களுக்கு தேவையான அளவில் பேருந்துகளை இயக்கி வருகிறோம். அதேபோல், பேருந்துகளில் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

தமிழக அரசு அறிவித்தவுடன், கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை வழிமுறைகளைப் பின்பற்றி பேருந்துகளை இயக்க நாங்கள் தயாராக உள்ளோம் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறினர். வரும் 21-ம் தேதிக்குப் பிறகு குறைந்த அளவில் பேருந்துகள் இயக்க வாய்ப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கிறோம் எனவும் தெரிவித்தனர். கொரோனா குறைந்து வரும் நிலையில் பஸ்  சேவைகளுக்கு தளர்வுகள் வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அரசு பஸ்கள் இயக்குவது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் அதிகாரிகளுடன்ஆலோசனை நடத்தினார்.

Related Stories:

>