அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோ கார்பன் ஆய்வு கிணறுகள் அமைக்க சுற்றுசூழல் அனுமதி கோரி ஓஎன்ஜிசி விண்ணப்பம்!!

அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு கிணறுகள் அமைக்க சுற்றுசூழல் அனுமதி கோரி இருக்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்வதற்கான அனுமதியை தமிழக அரசு ஒருபோதும் வழங்காது என கடந்த 13ம் தேதி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்த நிலையில், அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோ கார்பன் ஆய்வு கிணறுகள் அமைக்க அனுமதி கோரி தமிழ்நாடு சுற்றுசூழல் மதிப்பீட்டு ஆணையத்திற்கு ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

அதில் கருத்துகேட்பு கூட்டங்கள் தேவையில்லை என்பதால் சுற்றுசூழல் அனுமதி வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய 2 நாட்களில் மீண்டும் அனுமதி கோரி ஓஎன்ஜிசி நிறுவனம் விண்ணப்பித்திருப்பதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. தமிழக சுற்றுசூழல் மதிப்பீட்டு ஆணையம் இந்த விண்ணப்பத்தை உடனடியாக நிராகரிக்க உத்தரவிடுமாறு முதல்வரை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. 

Related Stories:

>