முன்விரோதம் காரணமா?: சென்னை பெரும்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் கொலை..!!

சென்னை: சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் அடுத்தடுத்த 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டதால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். பெரும்பாக்கம் அண்ணா தெருவை சேர்ந்த சரத் என்பவர் நேற்று இரவு தன்னுடைய வீட்டின் அருகே அமர்ந்திருந்த போது இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. அவர் மீது அடுத்தடுத்து 3 குண்டுகள் விழுந்து வெடித்ததில் சரத் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். 

தகவல் அறிந்த பெரும்பாக்கம் போலீசார் சரத்தின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த தெருவில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்து அதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல், சென்னை சேத்துப்பட்டில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். 

முத்தப்பா கிராணி என்ற தெருவில் வசித்து வரும் கருப்பு என்கிற வடிவேல் நேற்று தன்னுடைய வீட்டில் இருந்து வெளியே நடந்த கொண்டிருந்த போது 5 பேர் கொண்ட மர்மக்கும்பல் அவரை சுற்றிவளைத்து வெட்டி கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வடிவேல் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்திருக்கிறது. 

Related Stories:

>