9-வது நாளாக 1 லட்சத்து கீழ் சென்ற கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 62,224 பேர் பாதிப்பு..! 2,542 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 2,542 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

* புதிதாக  62,224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,96,33,105 ஆக உயர்ந்தது.

* புதிதாக 2,542 பேர் உயிரிழந்துள்ளனர்.

* இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,79,573 ஆக உயர்ந்துள்ளது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,07,628 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதன் மூலம் நாட்டின் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,83,88,100 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8,65,432  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* நாட்டின் இதுவரை 26,19,72,014 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related Stories: