முக்கிய செய்தி இந்தியா ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகளிடையே துப்பாக்கிச் சண்டை: ஒருவன் சுட்டுக்கொலை Jun 16, 2021 ஜம்மு காஷ்மீர் ஸ்ரீயம் ஜம்மு: காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டம் நஹுகம் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று நள்ளிரவு ரகசிய தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும், ஒரு பயங்கரவாதி சிக்கியுள்ளான். இதனால், தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. நேற்று இரவு 12 மணி அளவில் தொடங்கிய என்கவுண்டர் 6 மணி நேரத்திற்கு மேலாக நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆய்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநில எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மக்களவை தேர்தலில் கண்ணூஜ் தொகுதியில் போட்டி என சமாஜ்வாடி கட்சி அறிவிப்பு!
அரசியல் சட்டப்படி அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி பெறும் உரிமையை அளித்திட வேண்டும்; முதல்வருக்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில்!: வெப்பத்தின் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?..செய்ய வேண்டியவை.. செய்யக் கூடாதவை என்னென்ன?
கோட்டக் மஹிந்திரா வங்கியில் ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் சேர்த்தல், புதிதாக கிரெடிட் கார்டுகளை வழங்க தடை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!
மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் விடுத்த வழக்கு; கலைமகள் கல்வி நிறுவனத்தின் தாளாளர் குடியரசுக்கு ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு..!!
தமிழ்நாட்டில் நேற்று சாதனை அளவாக 40.50 மெகா யூனிட் சூரிய மின்சாரம் பயன்படுத்தப்பட்டது: மின்வாரியம் தகவல்
மோடியின் சர்ச்சை பேச்சு விவகாரம்; போர் காலத்தில் பாட்டி நகை கொடுத்தார் தாய் ‘மாங்கல்யத்தை’ தியாகம் செய்தார்: பிரியங்கா காந்தி பதிலடி
ஒப்புகைச் சீட்டுகளை பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
இட ஒதுக்கீட்டை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் இந்தியா கூட்டணி அரசு செயல்படும்: சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி
தோல்வி பயம் வந்துவிட்டதால்தான் பிரதமர் மோடி தேவையில்லாமல் சர்ச்சைக்குரிய வகையில் பேசுகிறார்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி
இந்தியாவில் நேற்று பதிவான அதிகபட்ச வெப்பநிலையில் சேலம் 3ம் இடம் (108.14°F) பிடித்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்
நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி வசூலிக்க காங்கிரஸ் கட்சி திட்டம்: தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
ஸ்மோக் பிஸ்கட்(Smoke Biscuits) குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம், அது உயிருக்கு ஆபத்து: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
பிரதமர் மோடியின் நண்பர்களிடம் இருந்து பணம் மீட்கப்பட்டு 90% மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்: ராகுல்காந்தி வாக்குறுதி