வழக்கறிஞர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி வழக்கு

சென்னை: மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் 64 ஆயிரம் வழக்கறிஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் தமிழகம் முழுவதும் 230 வழக்கறிஞர்கள் கொரோனா பாதித்து பலியாகியுள்ளனர். கொரோனாவுக்கு பலியான தமிழக அரசு ஊழியர்கள், நீதித்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் முதல் 25 லட்சம் ரூபாய் வரை நிவாரண உதவியாக தமிழக அரசு வழங்கி வருகிறது. அதேநேரம், கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியான வழக்கறிஞர்கள், கிளார்க்குகளின் குடும்பத்தினர் எந்த நிதியுதவியும் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வழக்கறிஞர்கள் மற்றும் கிளார்க்குகளின் குடும்பத்தினருக்கும் நிவாரண உதவி வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, நான்கு வாரங்களில் இதுகுறித்து பதிலளிக்கும்படி, மத்திய, தமிழக அரசுக்கும், பார் கவுன்சிலுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

Related Stories:

>