மதனின் யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும்: முஸ்லிம் லீக் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை: பப்ஜி விளையாட்டு எப்படி விளையாடினால் வெற்றி பெறுவது என்பது பற்றி ட்ரீக்ஸ் சொல்லி தரும் சேனலாக தொடங்கப்பட்டது தான் மதன் என்கின்ற யூடிப் சேனல். போக போக ஆபாச பேச்சும் பெண்களை இழிவு படுத்தும் பேச்சுகளும் இந்த சேனலில் அதிகரிக்க தொடங்கியுள்ளன. ஆபாச பேச்சுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்ததால் ஆபாச பேச்சுக்காகவே மதன் 18 ப்ளஸ் என்ற மற்றொரு சேனலும் தொடங்கியுள்ளனர். பப்ஜி சிறுவர்களையும், மாணவர்களையும் ஆபாச பாதைக்கு கொண்டு செல்லும் மதன் 18 ப்ளஸ் யூடிப் சேனலை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். இந்த யூடிப் சேனல் நடத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

Related Stories:

>