திருப்பணிகள் செய்ய தயாராக உள்ள கோயில் தேர்களின் பட்டியல் அனுப்ப வேண்டும்: அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு

சென்னை: இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை ஆணையர் குமரகுருபரன் திருக்கோயில் செயல் அலுவலர்கள், அனைத்து இணை ஆணையர், துணை, உதவி ஆணையருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடந்த சீராய்வு கூட்டத்தில் சிதிலமடைந்த தேர்களை சீரமைத்தும், கோயில்களுக்கு புதிதாக தேர்களை செய்து தேரோட்டம் நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிதியாண்டில் சீரமைக்கப்பட உள்ள தேர்கள் குறித்த அறிவிப்பை எதிர்வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் வெளியிட போவதாகவும் தெரிவித்துள்ளார். சார்நிலை அலுவலர்களால் பழுதடைந்துள்ள, சீரமைக்கப்பட வேண்டிய தேர்கள் விவரம் இவ்வலுவலகத்தில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை பைராகி மடம் திருவேங்கடமுடையார் கோயில், தங்கசாலை ஏகாம்பரேஸ்வரர் கோயில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில், திருவட்டீஸ்வரர் கோயில் உள்பட 73 கோயில்களின் தேர்கள் சீரமைக்கப்பட வேண்டி உள்ளது. தேர் திருப்பணிக்கான வரைபட ஒப்புதல் பெற்ற விவரம், மதிப்பீடு அங்கீகாரம் பெறப்பட்ட விவரம்/ மதிப்பீடு தயாரித்த விவரம். மதிப்பீடு அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பின் ஒப்பந்தப்புள்ளி அங்கீகாரம் பெறப்பட்ட விவரம். திருப்பணிக்கான நிதி ஆதாரம் விவரங்களை கருத்தில் கொள்ள வேண்டும். அனைத்து நிலைகளும் முடிவுற்று திருப்பணிகள் மேற்கொள்ள தயார் நிலையில் உள்ள திருத்தேர்களின் பட்டியலினை  3 தினங்களுக்குள் தவறாறு அனுப்ப வேண்டும்.

* 11 மாவட்டங்களில் உணவு

தமிழகத்தில்.தற்போது கொரோனா நோய் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு மட்டும் கடந்த மே மாதம் 12ம் தேதி முதல் வருகிற 21ம் தேதி வரை சில கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்திலும் கோயில்கள் வாயிலாக 11 மாவட்டங்களின் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் உள்ளிட்ட உணவு தேவைப்படும் நபர்களுக்கு வருகிற 21ம் தேதி வரை தொடர்ந்து வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>