நடிகை மண் குளியல்

சென்னை: பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்றவர் ஊர்வசி ரவுடேலா. இந்தி, பெங்காலி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஹீரோயினாக நடிக்கும் அவர், தமிழில் ஜேடி, ஜெர்ரி இயக்கும் ஒரு படத்தில் அறிமுகமாகிறார். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோவில், உடல் முழுவதும் களிமண் பூசிக்கொண்டு அமர்ந்திருக்கிறார். இது ஒரு வகை தெரபி. மண் குளியல் தனக்கு மிகவும் பிடிக்கும், சருமம் சுத்தமாக இருக்க மிகவும் உதவும் என்று தெரிவித்துள்ள ஊர்வசி ரவுடேலா, இதுபோன்ற சேற்றுக் குளியலை கிளியோபாட்ரா அதிகம் விரும்பி இருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒருமுறை மண் குளியலுக்கு ரூ.20 ஆயிரம் கட்டணம் செலுத்தி இருக்கிறார்.

Related Stories:

>