நீண்ட தூர ரயில் சேவை விரைவில் தொடங்குகிறது

புதுடெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்ட நீண்ட தூர ரயில் சேவைகள் மீண்டும் தொடங்க உள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் ரயில் சேவை  நிறுத்தப்பட்டது. தற்போது தொற்றினால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ளதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிபடியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, முதல் கட்டமாக அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் நீண்ட தூர ரயில் சேவையை தொடங்குவதற்கு இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த வாரத்திலேயே இந்த ரயில் சேவை தொடங்கப்படும் என தெரிகிறது.

Related Stories: