ராமர் கோயில் நில பேரம் மோசடி குற்றச்சாட்டு கூறிய ஆம்ஆத்மி எம்பி வீடு சூறை

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மூலம் நடந்து வருகிறது. ராமர் கோயில் வளாகத்துக்கு நிலம் வாங்கியதில் அறக்கட்டளை முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் குற்றம் சாட்டினார். ரூ.2 கோடி மட்டுமே மதிப்புள்ள இடத்தை ரூ.18 கோடிக்கு வாங்கியதன் மூலம் அறக்கட்டளைக்கு ரூ.16 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இந்நிலையில், டெல்லியில் உள்ள சஞ்சய் சிங்கின் வீட்டை முற்றுகையிட்ட பாஜ தொண்டர்கள் அவரது வீட்டினுள் நுழைய முயன்றனர். வீட்டின் முன்பு இருந்த பெயர் பலகையை அகற்றவும் முயற்சித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>