தமிழ்நாடு கால்பந்து சங்க முன்னாள் தலைவர் மரணம்

தமிழ்நாடு கால்பந்து சங்கத்தில் கவுரவ செயலாளர், துணைத்தலைவர், தலைவர் என 1982ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை பதவி வகித்தவர்  சிஆர்வி என்ற சி.ஆர்.விசுவநாதன் (85). உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். அவர் 1963 முதல் 2009ம் ஆண்டு வரை சென்னை, கோவை, நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கங்களிலும் தலைவர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பிலும் துணைத் தலைவராக இருந்துள்ளார். சென்னையில் நேரு கால்பந்து விளையாட்டு அரங்கம் புதிதாக கட்ட காரணமாக இருந்தவர்களில் விசுவநாதனும் ஒருவர். அவரது மறைவுக்கு தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் முன்னாள் கவுரவ செயலாளர் ரவிகுமார் டேவிட் உட்பட பல்வேறு தரப்பினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>