சில்லி பாயின்ட்...

* இந்தியா - இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி, பிரிஸ்டல் கவுன்டி மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது. மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி 7 ஆண்டு இடைவெளிக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

* புஜாராவின் பேட்டிங்கை விமர்சிப்பபவர்களை விட அவர் அதிகம் சாதித்துள்ளார் என்று மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கூறியுள்ளார்.

* இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள தவான் தலைமையிலான இந்திய அணி வீரர்கள் மும்பையில் முகாமிட்டுள்ளனர். இந்த தொடருக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக டிராவிட் செயல்படுவார் என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா நேற்று உறுதி செய்துள்ளார்.

* ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மல்யுத்த வீரர் சுமித் மாலிக், ‘நான் ஊக்கமருந்து எதுவும் உட்கொள்ளவில்லை. சில வலி நிவாரணிகளை மட்டுமே பயன்படுத்தி வருகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>