மின்கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

கரூர்: மின்கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு இல்லை என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா நிவாரண நிதிக்கான 2வது தவணை ரூ.2,000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வினியோகத்தை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று துவக்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கொரோனா படிப்படியாக குறைந்து வருவதாலும், 50%பணியாளர்களுடன் நிறுவனங்கள் இயங்கி வருவதாலும் இனி வரும் காலங்களில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு இல்லை. அதற்கான தேவை இருக்காது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பாமக போன்ற கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டன. கடந்தாண்டு கொரோனா உச்சத்தில் இருந்த போதும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அப்போது, இது போல் யாரும் கேள்விகள் எழுப்பவில்லை. மதுபானங்கள் கடத்தல் மற்றும் கள்ளச் சாராயம் காய்ச்சுவதை தடுக்கவே,மது கடைகள் திறக்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>