மேற்கு வங்கத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் சந்திக்க மம்தா பானர்ஜி இப்போதே வியூகம்: பிரசாந்த் கிஷோர் குழுவை நியமித்தார்

கொல்கத்தா:  மேற்கு வங்கத்தில் 2026ல் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க, பிரசாந்த் கிஷோரின் ‘ஐ பேக்’ குழுவை மம்தா பானர்ஜி  இப்போதே நியமித்துள்ளார். மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 3வது முறையாக வரலாற்று வெற்றியை பதிவு செய்வதற்கான தேர்தல்  வியூகங்களை வகுத்து கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர். தேர்தல் நேரத்தில் திரிணாமுல் தலைவர்கள் பலர் பாஜ.வுக்கு தாவியதால், அக்கட்சி ஆட்சிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைத்தையும் முறியடித்து திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததில் பெரும் பங்காற்றியர் பிரசாந்த் கிஷோர். இந்த தேர்தல் முடிவுகளுக்கு பின் பேசிய பிரசாந்த் கிஷோர், ‘மேற்கு  வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

நான் கூறியபடி பாஜ இரட்டை இலக்கத்தை தாண்டவில்லை. அரசியல் வியூக பணியில் இருந்து விலக  விரும்புகிறேன். இனிவரும் நாட்களை எனது குடும்பத்தாருடன் செலவிடுவதற்கு  விருப்பப்படுகிறேன்,’ என அறிவித்தார்.  தனது நிறுவனத்தை அதில் உள்ள மற்ற  நண்பர்கள் பொறுப்பேற்று நடத்துவார்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில்,  சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை பிரசாந்த் கிஷோர்  திடீரென சந்தித்தார். இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. 2024ம் ஆண்டு நாடாளுமன்ற  தேர்தலில் மூன்றாவது அணியை அமைத்து வெற்றி பெற செய்வதற்காக பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையை பவார் கேட்டதாக கூறப்பட்டது. இதற்கிடையே, மேற்கு வங்கத்தில் 2026ல் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்காக பணியாற்றவும், பிரசாந்த் கிஷோரின் ‘ஐ பேக்’ குழுவை திரிணாமுல் காங்கிரஸ் நியமித்துள்ளது, இதன்மூலம், இப்போது முதலே மம்தாவுக்காக இக்குழு பணியாற்ற உள்ளது.

Related Stories: