நீலகிரி, ஏற்காடு உள்பட 25 சிறப்பு ரயில்கள் ரத்து

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிடட்ட அறிக்கை: பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால்  பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த 25 சிறப்பு ரயில்களின் சேவையானது தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி சென்னை சென்ட்ரல் - ஐதராபாத் (02603, 02604), சென்னை சென்ட்ரல் - ஈரோடு (02649, 02650), சென்னை எழும்பூர்- திருச்சி (02653, 02654), சென்னை எழும்பூர்- கொல்லம் (06101, 06102), சென்னை சென்ட்ரல் - மதுரை (06019, 06020), தாம்பரம் - நாகர்கோவில் (06065, 06066), சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் (06865, 06866), சென்னை சென்ட்ரல் - ஆழப்புழா (02639, 02640), சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம் (02671, 02672), சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் (02695, 02696), சென்னை எழும்பூர்- மன்னார்குடி (06179, 06180), தாம்பரம் - நாகர்கோவில் (06191, 06192), சென்னை எழும்பூர்-  ராமேஸ்வரம் (06851, 06852) ஆகிய சிறப்பு ரயில்கள் இன்று  முதல் வருகிற 30ம் தேதி (புதன்கிழமை) வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல்  சென்னை எழும்பூர்- நாகர்கோவில் (06063, 06064) சிறப்பு ரயிலானது நாளை மற்றும் வருகிற 24ம் தேதிகளிலும்,  சென்னை எழும்பூர் - மதுரை (06157, 06158) சிறப்பு ரயிலானது வருகிற 18ம் தேதி முதல் 27ம் தேதிகளிலும்,  சென்னை சென்ட்ரல் - கோவை (02681, 02682)  சிறப்பு ரயிலானது வருகிற 19 மற்றும் 26ம் தேதிகளிலும் மற்றும்  சென்ட்ரல் - திருவனந்தபுரம் (02697, 02698)  சிறப்பு ரயிலானது வருகிற 20 மற்றும் 27ம் தேதிகளிலும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

Related Stories:

>