ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோயில் குளம் சீரமைக்க வேண்டும்: அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு

சென்னை: இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை ஆணையர் குமரகுருபரன், அதிகாரிகளுக்கு அனுப்பு உள்ள சுற்றறிக்கை: இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடந்த சீராய்வு கூட்டத்தில் திருக்குளங்களை சீரமைத்து தெப்ப திருவிழா நடத்திட ஏதுவாக திருக்குளங்களை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்நிதியாண்டில் சீரமைக்கப்பட உள்ள திருக்குளங்கள் குறித்த அறிவிப்பு இந்நிதியாண்டில் சட்டப்பேரவை அறிவிப்பில் இடம் பெற உள்ளது. எனவே, சார்நிலை அலுவலர்களால் பழுதடைந்துள்ள சீரமைக்கப்பட வேண்டிய திருக்குளங்கள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருக்கோயில்களின் திருக்குளங்களை அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினை உடன் தொடர்பு கொண்டு சீரமைப்பு மதிப்பீடு தொகை விவரத்தினை மாவட்ட நிர்வாகத்திற்கு அளித்து சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியலை 5 நாட்களுக்குள் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Related Stories:

>