தமிழகத்துக்கு 4,97,640 தடுப்பூசி வந்தது

சென்னை: தமிழகத்துக்கு மேலும் 4,97,640 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மும்பையிலிலிருந்து விமானத்தில் சென்னை வந்தது. தமிழகத்துக்கு 18 மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போட, தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. இதையடுத்து தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசிடம் கூடுதல் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு ஒதுக்கும்படி கோரிக்கை விடுத்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசு தற்போது தமிழகத்திற்கு தடுப்பூசிகளை ஐதராபாத், புனே, மும்பையிலிருந்து விமானங்களில் சென்னைக்கு அனுப்பிவருகிறது. இந்நிலையில், நேற்று பிற்பகல் 11.30 மணிக்கு மும்பையிலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தில் 4,97,640 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 42 பார்சல்களில் வந்தன.

Related Stories:

>