கூடலூரில் காயத்துடன் சுற்றித்திரியும் ‘சில்வர் மான்ஸ்ட்ரா’ யானைக்கு சிகிச்சை அளிக்க கரோல் அமைப்பு

ஊட்டி: கூடலூர் வனக்கோட்டத்தில் ‘‘சில்வர் மான்ஸ்ட்ரா’’ என்று அழைக்கப்படும் ஆண் காட்டு யானை ஒன்று வால் பகுதியில் பெரிய காயத்துடன் சுற்றுகிறது. சக யானையுடன் ஏற்பட்ட மோதலில் இந்த காயம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்த வனத்துறையினர், காயத்தை குணப்படுத்த பழங்களில் மருந்து வைத்து யானைக்கு வழங்கினர். இதனால், காயம் குணமாகி வந்த நிலையில், அரிப்பு ஏற்படும்போது மரங்களில் காயத்தை உரசியதால், பெரிதாகி வால் பகுதி துண்டாகி உள்ளது. இதனால், யானையை பிடித்து முதுமலையில் வைத்து சிகிச்சை அளிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து வனத்துறை உயரதிகாரிகள் கூறுகையில், யானையை பிடிக்க அபயரண்யம் முகாமில் புதிதாக கரோல் (மரக்கூண்டு) அமைக்கப்பட்டு வருகிறது. அது தயாரானதும் 2 கும்கி யானைகள் உதவியுடன் அந்த யானை பிடிக்கப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories:

>