காற்றாலை மின்உற்பத்தி அதிகரிப்பு

கோவை:  கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் காற்றாலை மின் உற்பத்தி சீசன் துவங்கியது. காற்றின் வேகம் சீராக இல்லாததால் மின் உற்பத்தியில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. தற்போது ஜூன் முதல் வாரத்தில் இருந்து காற்று வேகம் அதிகரிக்க தொடங்கியதால் தினமும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இது பற்றி இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர் சங்க தலைவர் கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது: கடந்த சில நாட்களாக காற்றின் வேகம் அதிகரிக்க துவங்கியுள்ளதால் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவும் கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தின் மின் நுகர்வில் 30 சதவீதம், அதாவது 92 மில்லியன் யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் கிடைக்கிறது என்றார்.

Related Stories:

>