மதுரை, சென்னை ரயில்வே ஸ்டேஷனுக்கு குண்டு மிரட்டல்

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே புதுமாயாகுளத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் தர்மராஜன் மகன் சரவண கார்த்திக் (32). பிடெக் பட்டதாரி. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியவர், ராஜினாமா செய்து விட்டு சொந்த ஊர் திரும்பினார். இவர், சென்னை சென்ட்ரல், மதுரை ரயில்வே ஸ்டேஷன்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து தனது வாட்ஸ் அப் மூலம் சென்னை ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றுமுன்தினம் தகவல் அனுப்பினார். போலீஸ் சோதனையில் குண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து, ரயில்வேபோலீசார் நேற்று புதுமாயாகுளம் சென்று சரவண கார்த்திக்கிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். கடந்த 2015 முதல் மனநலம் பாதித்த நிலையில் சரவண கார்த்திக் சிகிச்சையில் உள்ளது தெரிந்தது. இதையடுத்து அவரது லேப்டாப், செல்போனை கைப்பற்றி ரயில்வே போலீசார் எடுத்துச் சென்றனர். அதில் உள்ள விபரங்கள் அடிப்படையில் தொடர்ந்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories:

>