ஆடம்பரமான வரவேற்பில் துளியும் உடன்பாடில்லை புத்தகங்களை எனக்கு வழங்குங்கள்: உதயநிதி ஸ்டாலின் அறிக்கை

சென்னை: ஆடம்பரமான வரவேற்பில் தனக்கு துளியும் உடன்பாடில்லை. நான் பங்கேற்கு நிகழ்ச்சிகளில் பொன்னாடையை தவிர்த்து புத்தகங்களை வழங்குங்கள் என திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக சார்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘ஒன்றிணைவோம் வா’ ஊரடங்கு கால நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் இளைஞர் அணி செயலாளர் என்ற முறையில் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து வருகிறேன். இந்த பயணம் எனக்கு உற்சாகத்தை தந்தாலும் சில இடங்களில் பட்டாசு வெடிப்பது, ப்ளக்ஸ் பேனர் வைப்பது, பொன்னாடை அணிவிப்பது, பூங்கொத்துகளை வழங்குவது, ஆடம்பரமான வரவேற்பு தருவது போன்ற செயல்களில் கட்சியினர் சிலர் ஈடுபடுகின்றனர். இவற்றில் துளியும் எனக்கு உடன்பாடில்லை. எனவே, நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பொன்னாடை, பூங்கொத்தை தவிர்த்துவிட்டு புத்தகங்களை வழங்குங்கள்.

கொரோனா தொற்றால், ஊரடங்கால் பாதிக்கப்பட்டோரை மீட்டெடுக்கும் பணிகளில் அரசு முனைப்பு காட்டி வருகிறது. இப்பணியில் இளைஞரணியும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்கிறது. அதற்கு உதவும் வகையில் திமுக அறக்கட்டளைக்கு தங்களால் இயன்ற அளவு நிதியளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நிதி அளிப்போர் விவரமும், அவை எவ்வாறு, யாருக்கு பயனுள்ள வகையில் செலவு செய்யப்படுகிறது என்ற விவரமும் என் சமூக வளைதளப் பக்கங்களில் வெளிப்படையாக பகிரப்படும். ‘DMK Youth Wing Charitable Trust’ என்ற பெயரில் காசோலை, வங்கி வரைவோலை மூலமாக அறக்கட்டளை நிதி அனுப்பலாம். Electronic Clearing System/ RTGS/ NEFT மூலமாக, இந்தியன் வங்கி, கிளை- தேனாம்பேட்டை, சென்னை -18, சேமிப்பு கணக்கு எண்- 783271504, IFSC Code- IDIB 000T011 கணக்குகளுக்கு நேரடியாக அனுப்பலாம்.

Related Stories: