மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது

பெரம்பூர்:  பெரம்பூரை சேர்ந்த பெண் ஒருவர் தனது 15 வயது மகளுக்கு, தன் கணவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக குழந்தைகள் ஹெல்ப்லைன் எண் 1098ல் புகார் கொடுத்தார். அதனை தொடர்ந்து இந்திய குழந்தைகள் நல சங்கம் சார்பில் 2 பேர், இதுபற்றி விசாரித்து பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தை நாசர் ஷெரிப்பை (43) போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அமைந்தகரையை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து, திருமணம் செய்வதாக ஆசை  வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த, அதே பகுதியை சேர்ந்த செல்வகுமாரை (24), போக்சோ சட்டத்தின் கீழ் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், நேற்று முன் தினம் இரவு கைது செய்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>