ஆண் தாயாக விளங்குகிறார்!: சாலை பாதுகாப்பு பணியில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளித்த முதலமைச்சருக்கு முன்னாள் காவலர் நன்றி..!!

திருச்சி: சாலைகளில் பாதுகாப்பு பணியில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் காவலர் கவி செல்வராணி நன்றி தெரிவித்துள்ளார். திருச்சியை சேர்ந்த கவி செல்வராணி, கலைஞருக்கு இரங்கற்பா வீடியோ வெளியிட்ட காரணத்தால் விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கப்பட்டதை தொடர்ந்து தனது 21 ஆண்டு காவலர் பணியை துறந்தவர் ஆவார். 

இந்த நிலையில் சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டதற்கு கவி செல்வராணி வரவேற்பு தெரிவித்துள்ளார். அதற்கு நன்றி தெரிவித்து அவர் வெளியிட்ட பாராட்டு மடலில், பெண் காவலர்களின் பிரச்சனைகளை விவரித்துள்ளார். 

அதில் பெண் காவலர்களுக்கு ஒரு ஆண் தாயாக விளங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது ஒவ்வொரு பெண் காவலர்களுக்கும் தாய் அன்பும், மதிப்பும், மரியாதையும் அதிகரித்துக்கொண்டே செல்லும் என செல்வராணி கூறியுள்ளார். பேரறிஞர் அண்ணா, கலைஞர் இருவரும் இன்று உயிருடன் இருந்திருந்தால் நீங்கள் சவால்களை சமாளிக்கும் சாமர்த்தியத்தை கண்டு வியந்திருப்பார்கள் எனவும் செல்வராணி தெரிவித்துள்ளார். 

Related Stories:

>