பண்டிகை காலத்தில் இயக்கப்படும் 12 சிறப்பு ரயில்கள் சேவைகள் மேலும் நீட்டிப்பு!: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

சென்னை: பண்டிகை காலத்தில் இயக்கப்படும் 12 சிறப்பு ரயில்கள் சேவைகள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

நீட்டிக்கப்பட்ட 12 ரயில் சேவையின் விவரம்: 

* மதுரை - பைக்கானிர் சிறப்பு ரயில் ஜூலை 1ம் தேதி முதல் நவம்பர் 4ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் இயக்கப்படும்.

* பைக்கானிர் - மதுரை சிறப்பு ரயில் ஜூலை 4ம் தேதி முதல் நவம்பர் 7ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும். 

* நெல்லை - பிலாஸ்பூர்  சிறப்பு ரயில் ஜூலை 4ம் தேதி முதல் நவம்பர் 7ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும். 

* பிலாஸ்பூர்  - நெல்லை சிறப்பு ரயில் ஜூலை 6ம் தேதி முதல் நவம்பர் 9ம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும். 

* நாகர்கோவில் - மும்பை சிறப்பு ரயில் ஜூலை 1ம் தேதி முதல் நவம்பர் 7ம் தேதி வரை ஞாயிறு, வியாழக்கிழமைகளில் இயக்கப்படும்.

* மும்பை  - நாகர்கோவில் சிறப்பு ரயில் ஜூலை 2ம் தேதி முதல் நவம்பர் 8ம் தேதி வரை திங்கள், வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும்.

* சென்னை சென்ட்ரல் - லக்னோ சிறப்பு ரயில் ஜூலை 3ம் தேதி முதல் நவம்பர் 6ம் தேதி வரை சனி, செவ்வாய் அன்று இயக்கப்படும். 

* லக்னோ - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் ஜூலை 5ம் தேதி முதல் நவம்பர் 8ம் தேதி வரை திங்கள், வியாழன் இயக்கப்படும். 

* சென்னை எழும்பூர் - ஜோத்பூர் சிறப்பு ரயில் ஜூலை 3ம் தேதி முதல் நவம்பர் 6ம் தேதி வரை இயக்கப்படும்.

* ஜோத்பூர் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஜூலை 5ம் தேதி முதல் நவம்பர் 8ம் தேதி வரை இயக்கப்படும்.

* திருநெல்வேலி - தாதர் சிறப்பு ரயில் ஜூலை 7ம் தேதி முதல் நவம்பர் 3ம் தேதி வரை புதன்கிழமைகளில் இயக்கப்படும். 

* தாதர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் ஜூலை 8ம் தேதி முதல் நவம்பர் 4ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் இயக்கப்படும்.

Related Stories: