இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் ஆவணங்கள் எவை?: அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: தேர்தல் தொடர்பான ஆவணங்களை பெறுதல் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் தாக்கல் செய்த சான்றுகள் உள்ளிட்டவற்றை இணையதளத்தில் வெளியிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை காணொலி காட்சி மூலமாக இன்று நடைபெற்றது. 

அப்போது தேர்தல் வழக்கு தொடர இந்த ஆவணங்கள் அவசியமானது என்று மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அவரது வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேர்தல் தொடர்பான எந்தெந்த ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறித்தும், எந்தெந்த ஆவணங்களை விண்ணப்பித்து பெற வேண்டும் என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளனர். ஒரு வாரத்திற்குள் இந்த அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். 

Related Stories:

>