×

புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் தேர்வு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில சட்டமன்ற சபாநாயகராக பாரதிய ஜனதா எம்எல்ஏ செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சபாநாயகர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று பகல் 12 மணியுடன் நிறைவடைந்த நிலையில் பாரதிய ஜனதா எம்எல்ஏ செல்வம் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

அதனையடுத்து அவர் போட்டியின்றி புதுச்சேரி சட்டப்பேரவையின் 21வது சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவியேற்பு தொடர்பாக நாளை தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் முறைப்படி அறிவிப்பு வெளியிடுவார்.

பாரதிய ஜனதாவை சேர்ந்த ஒருவர் புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.Tags : BJGA MLA Wealth ,Novachcheri Assembly , puduchcherry
× RELATED பஞ்சாப் முதல்வர் ஆலோசகர் பதவி பிரசாந்த் கிஷோர் திடீர் ராஜினாமா