ஆம்பூர் அருகே உள்ள தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு; 2 பேர் கவலைக்கிடம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே ஆம்பூரில் உள்ள தோல் தொழிற்சாலையில் கழவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. ஆம்பூர் அடுத்த பெரியவரிகத்தில் ஆலை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது சம்பவம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கூலி தொழிலாளி ரத்தினம் என்பவர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதாக , மற்றொரு தொழிலாளி பிரசாத் என்பவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவம் குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் அவர்களது உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்துள்ளனர். தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததே இந்த உயிரிழப்புக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் உயிரிழந்த ரமேஷ் என்பவரின் குடும்பத்தினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>