தொடர் மழையால் உற்பத்தி பாதிப்பு!: தூத்துக்குடியில் உப்பு விலை மும்மடங்கு உயர்வு...பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யும் அவலம்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு தொழிற்சாலைகளுக்கு வெளிமாநிலங்களில் இருந்து உப்பு கொள்முதல் செய்யவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. உப்பு உற்பத்தியை பிரதானமாக கொண்ட தூத்துக்குடியில், அந்த தொழிலை நம்பி ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

ஆண்டுக்கு 25 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டு வந்த சூழலில் தற்போது 12 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் காரணமாக உப்பின் விலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. ஒரு டன் உப்பு 1500 ரூபாயில் இருந்து 4500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும் மட்டுமின்றி தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

தொடர் மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் உப்பு தட்டுப்பாடு மேலும் பல நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிவித்துள்ள உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். கொரோனா காலத்தில் வருவாய் இழந்து தவிக்கும் தங்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகும். 

Related Stories:

>