×

வரும் 17-ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்; பொறுப்பேற்றபிறகு பிரதமருடனான முதல் சந்திப்பு

சென்னை: டெல்லியில் நாளை மறுநாள் மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்கிறார். தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகள், செங்கல்பட்டு தடுப்பூசி ஆலையில் உற்பத்தி ஆகியவற்றை வலியுறுத்த உள்ளார். டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜூன் 18-ல் சோனியா காந்தியை  சந்தித்து பேசுகிறார். டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் தமிழக அரசின் தலைமை அலுவலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பிறகு அவர் அளித்த பேட்டியில், பிரதமர் நரேந்திர மோடியை வரும் 17-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். 


இதில் நீட் தேர்வு விலக்கு, ஆக்சிஜன் பற்றாக்குறை, கருப்பு பூஞ்சை மருந்தின் தேவை, ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது, காவிரி பிரச்னை மற்றும் மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான பிரச்னைகள் என்பது போன்ற தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் முன்வைக்கவுள்ளதாகக் கூறியுள்ளார். முதலமைச்சராக பொறுப்பேற்றபிறகு பிரதமருடனான முதல் சந்திப்பு இதுவாகும்.



Tags : PM Modi ,Delhi ,Q. Stalin , stalin, modi , meet
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!