×

கொரோனா தடுப்பு பணிகள்: மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: தமிழக மாவட்டங்களில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் பரவலாக கொரோனா தொற்று பரவலின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு நாளொன்றுக்கு ஏற்பட்ட தொற்றின் எண்ணிக்கை 36 ஆயிரம் என்ற நிலை தற்போது 13 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது.தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு வெற்றி கிடைத்துள்ள நிலையில், முழு ஊரடங்கில் படிப்படியாக தளர்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து வருகிறார். 


அதற்காக தற்போதைய தொற்றின் நிலை பற்றி அறிந்து கொள்வதற்காகவும், மாவட்ட அளவில் மேற்கொள்ளப்படும் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்வதற்காகவும் இன்று மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனை கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார்.


சென்னை தலைமைச்செயலகத்தில் இந்த கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. காணொலி காட்சி மூலம் நடக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்தின் கொரோனா தொற்றின் நிலை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிகிறார். தொற்று பரவல் அதிகம் உள்ள 11 மாவட்டங்களின் நிலவரத்தை அறிந்துகொள்வதில் அவர் ஆர்வம் காட்டுவார் என்று கூறப்படுகிறது. அங்கு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஆலோசனை வழங்குகிறார்.



Tags : Corona ,Chief Minister ,MD ,District ,Collectors ,Q. Stalin , Corona prevention, with collectors, MK Stalin, consultation
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...