வேகமெடுக்கும் கரும்பூஞ்சை நோய்!: நாளொன்றுக்கு 4000 தடுப்பு மருந்துகள் தர ஒன்றிய அரசுக்கு கலாநிதி வீராசாமி கோரிக்கை..!!

சென்னை: தமிழத்தில் வேகமாகும் பரவி வரும் கரும்பூஞ்சை நோயில் இருந்து மக்களை பாதுகாக்க நாளொன்றுக்கு 4000 தடுப்பு மருந்துகளை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை திருவெற்றியூரில் தனியார் மருத்துவமனையில் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 8 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் மருத்துவமனைக்கு சென்ற வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து திருவண்ணாமலையை சேர்ந்த கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 45 வயது சர்க்கரை நோயாளிக்கு, முக அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மதன்குமார், கார்த்திகேயன் உள்ளிட்ட மருத்துவருடன் இணைந்து பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவரான கலாநிதி வீராசாமி, முக எலும்பு மற்றும் கண்ணில் அறுவை சிகிச்சை செய்தார். 

நோயின் தாக்கம் எலும்பு மற்றும் கண்ணில் அதிகம் பாதித்துள்ளதால் வலப்புற கண் முற்றிலும் அகற்றப்பட்டது. வேகமாகும் பரவி வரும் கரும்பூஞ்சை நோயில் இருந்து மக்களை பாதுகாக்க நாளொன்றுக்கு 4000 தடுப்பு மருந்துகளை வழங்க வேண்டும் என்று கலாநிதி வீராசாமி வலியுறுத்தினார். 

சென்னையில் அரசு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், வடசென்னையில் முதன்முறையாக தனியார் மருத்துவமனையில் கரும்பூஞ்சைக்கான தனி வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரும்பூஞ்சை நோய் சிகிச்சைக்காக 50 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டை கம்பம் திமுக சட்டமன்ற உறுப்பினர்  கம்பம் ராமகிருஷ்ணர், ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். 

மேலும் குழந்தைகளுக்கு 30 படுக்கைகளுடன் கூடிய கொரோனா வார்டும், கொரோனா நோய் தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு ஏற்படும் சுவாசக்கோளாறு, மனசோர்வு மற்றும் இணை நோய்கள் பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கும் கொரோனாவுக்கு பிந்தைய கவனிப்பு மையம் ஆகியவையையும் அவர்கள் திறந்து வைத்தனர். 

Related Stories:

>