ராமர் கோயில் நில முறைகேடு விவகாரம்: ராமஜென்மபூமி அறக்கட்டளை அறிக்கை அளிக்க உ.பி. முதல்வர் உத்தரவு

லக்னோ: ராமர் கோயில் நில முறைகேடு விவகாரத்தில் அறிக்கை அளிக்க ராமஜென்மபூமி அறக்கட்டளைக்கு உ.பி. முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நிலம் வாங்கியதில் பலகோடி முறைகேடு என சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ரூ.2 கோடிக்கு வாங்கிய நிலத்தை சில நிமிடங்களிலேயே ரூ.18.5 கோடிக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நிலம் வாங்குவதில் பெரிய மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் அரசியல் நோக்கம் கொண்டவை என்று ராம் ஜென்மபூமி அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் கூறியிறுந்தார். 

ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த் க்ஷேத்ரா அறக்கட்டளை வாங்கிய நிலத்தின் விலை, சந்தை விலையை விட மிகவும் குறைவு என்று தமது அறிக்கையொன்றில் அவர் கூறியுள்ளார். கடந்த மார்ச் 18ஆம் தேதி சுமார் 10 நிமிடங்களில் முதலில் விற்பனை ஒப்பந்தமும் அதன் பின்னர் மற்றொரு ஒப்பந்தமும் செய்யப்பட்டது. 2 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட அந்த நிலம் 10 நிமிடங்களுக்குப் பிறகு 18 கோடி ருபாய்க்கு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது ஏன்? ஒப்பந்தம், பத்திரப்பதிவு ஆகிய இரண்டிற்குமே அறங்காவலர் அனில் மிஷ்ரா மற்றும் மேயர் ரிஷிகேஷ் உபாத்யாய சாட்சிகளாக இருந்திருக்கிறார்கள் என குறிப்பிட்டிருந்தார். இந்த முழு விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பவன் பாண்டே கோரியுள்ளார்.

Related Stories:

>